Local Body of Christ - all christians in your locality are together the local Church
நீங்கள் கிறுஸ்த்துவின் சரிரத்தின் ஊழியத்தில் பங்காளராக இருக்கலாம் எனினும் நீஙகள் விரும்பினால். முதலாவதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால். உங்கள் அருகாமையில் உள்ள அனைத்து கிறுத்தவர்களும் ஒன்று கூடுவதே சபை. அதுவே இயேசு கிறுஸ்த்துவின் ஜெபமாகும, பிதாவும் அவரும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என (யோவான் 17:21)ல் கூறுகிறார். இது உலகத்தில் உள்ள் பல்வேறு இடங்களில்  தன் அருகாமையில் உள்ள விசுவாசிகளை சந்திப்பதின் மூலமும் வீடு சந்திப்பின் ஊழியத்தின் மூலமும் நிறைவேற்றப் பட்டு கொண்டு வருகிறது. இந்த கிறுஸ்த்துவின் சரிரத்தின் ஊழியமும் இவ்வூழியத்தை நிறைவேற்றி கொண்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் கிறுஸ்த்துவின் சபையை பார்க்க வேண்டும் என்பதே இவ்வூழியத்தின் நோக்கம்.
இந்த செய்தியின் மூலம் நீங்கள் தொடப்பட்டீர்களா?ஆம் என்றால் தொடர்பு  பகுதியை அழுத்தவும்
You need Flash Player in order to view this.
Kavi arangam - Poem (Kavidhai) - Bay Area
Poem (கவிதை) presented by me in the San Francisco Bay Area Tamil Manram's (சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்) Muthamizh Vizhaa (முத்தமிழ் விழா) 2009 Kavi arangam (கவி அரங்கம்) at San R...
 
 
  
                       வார இதழ் மற்றும் ஜெப குறிப்புகள்

நவம்பர் 15/2010
கடைசியாக என் அருகமையில் உள்ள நெதர்லாந்து, ஆமீர் மற்றும் பல நாடுகளிள் உள்ள விசுவாசிகளின் இனையதளத்தின் தொடர்பை பெறுவதற்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அக்கடிதம் இவ்வூழியத்தின் முத்திரையால் முத்திரையிடப்பட்டுள்ளது. இதை நான் ஏன் கூறுகிறேனென்றால் அக்கடிதம் பார்ப்பதற்கு நண்றாகவும், தொடர்பு கொள்வதற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. நான் அவர்கள் பதில் கிடைக்கும் வரை காத்திருப்பேன், பின்பு அவர்களது இல்ல்ங்களில் ஜெபிப்பதற்கும் மற்றும் கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கான பணிகளை மேற்கொள்வேன்.

இந்தியாவில் உள்ள என் உடன் வேலையாள் என் இனையதளத்தை தமிழில் மொழிபெயற்ப்பதற்க்கான பணிகளை தொடங்கி விட்டார்.
 
பிலிப்பைன்ஸில் உள்ள ஊழியர்  ஜெபிப்பதற்க்கு என்னிடம் ஊழிய ஜெப குறிப்புகள் கேட்டிருந்தார், கடந்த வாரங்களாக நான் சற்று வேலையாக இருப்பதால் என்னால் பதில் அனுப்ப இயலவில்லை.
 
ஸ்டெடென்விஜிக்-நூர், என்ற அருகாமையில் உள்ள இடத்தில் இவ்வூழியம் தடைப்படாமல் நடக்க தொடர்ந்து ஜெபித்து கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள என் உடன் வேலையாளிடம் முகவரி அட்டை சரியாக கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள். ஏனென்றால் கடந்த முறை சில பிழையால் சரியாக அவரிடம் கிடைக்கவில்லை. எனவே விஸ்டா பிரிண்ட் நிறுவனத்தினர் அதை மறுபடியுமாக அவருக்கு அனுப்பியுள்ளனர். பிலிப்பைன்ஸில் உள்ள ஊழியருக்கு நான் எழுத போகும் கடிதம் தெளிவாகவும், நன்றாகவும் அமைய ஜெபித்து கொள்ளுங்கள். இவ்வூழியத்தில் சவால்கள் அநேகம் எனினும் கர்த்த்ர் எங்களோடு இருக்கிறார் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம். கணவனுக்காக தன்னை ஆயத்தப் படுத்தும் மணவாட்டியை போல எங்களை நாங்கள் கர்த்தருக்கென்று ஆயத்த்ப் படுத்துகிறோம்.
 
 
 
அக்டோப்ர் 31 2010

சில நாட்களுக்கு முன்பு மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் நான் 5000 முகவரி அட்டை பதிவு செய்திருந்தேன். மற்றும் என்னிடம் இவ்வூழியத்தின் முத்திரை உள்ளது எனவே எப்பொழுதெல்லாம் கடிதம் அனுப்புகிறேனோ அப்பொழுதெல்லாம் இவ்வூழியத்தின் முத்திரையை ஒட்டி எளிமையாக அனுப்புவேன்.
 
பிலிப்பைன்ஸில் இருந்து ஒரு புதிய செய்தி கிடைத்துள்ளது அதென்னவென்றால் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ஊழியக்காரரின் குடும்பம் இவ்வூழியத்திற்காக் ஜெபித்து வருகின்றனர்.  அநேகரும் இவ்வூழியத்திற்க்காக தனிப்பட்ட முறையிலும், தங்கள் குடும்ப ஜெபங்களிளும் ம்ற்றும் ஜெபக் கூட்டங்களிலும் ஜெபித்துள்ளனர். எனினும் அந்த ஊழியரின் ஜெபம் அர்ப்பணிக்கப்பட்ட ஜெபமாக இருப்பதால், அது இவ்வூழியத்திற்கு மிகவும் ஆசீர்வாதமாக அமைந்துள்ளது.

அதுமற்றுமின்றி அவர்கள் தான் அந்த இடத்தில் இருந்து இவ்வூழியத்திற்கு அறிக்கை விடுத்த முதல் நபர் என்பது மிகவும் அறிவிக்க்ப் படத்தக்க ஒரு விஷயமாகும்.

இவ்வூழியத்தின் நோக்கம் தடையின்றி தொடர்ந்து நிறைவேற ஜெபித்துக் கொள்ளுங்கள்.  இவ்வூழியம் மக்களை தொடர்பு கொள்ளும் விஷயத்திலும், மேலும் அடிப்படை விஷயங்களிலும் முன்னேற ஜெபித்து கொள்ளுங்கள் மற்றும் இவ்வூழியத்தின் நோக்கங்கள் இவ்வூழியம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தடையின்றி நிறைவேற ஜெபித்துக் கொள்ளுங்கள். இந்த இனையதளத்தை அலுவலக இனையதளமாக பதிவு செய்ய விரும்புகிறோம், எனினும் அதன் செலவுகள் அதிகம், எனவே அதற்க்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். அது மற்றுமின்றி இவ்வூழியத்தின் தேவைகள் அநேகம் உண்டு, எனவே பரத்திலுருந்து எங்களுக்கு ஒத்தாசை வரும்படி ஜெபித்துக் கொள்ளுங்கள்.
 
 
 
அக்டோபர் 19/2010

என் அருகாமையில் உள்ள ஒரு சகோதரரோடு நான் வேத ஆராய்ச்சி நடத்தி வருகிறேன். அந்த வேத ஆராய்ச்சிக்கு நான் பயன் படுத்திய புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  நான் என் வேலையிலிருந்து சிறு நேரம் ஒதுக்கி, அந்த நபருக்கு சில முக்கிய குறிப்புகளை அறிவிக்க பல புத்தக்ங்களை அலசிக் கொண்டிருக்கின்றேன்.  அந்த முக்கிய குறிப்புகளை நான் சேர்த்தவுடன், அந்த நபரை சந்தித்து அவற்றை பகிர்ந்து கொள்ளுவேன்.

நான் 5000 முகவரி அட்டையை மிகக் குறைந்த விலைக்கு விஸ்டா பிரிண்ட் நிருவனத்தினரிடம் பதிவு செய்திருக்கிறேன்.  ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அது அதிகம் தான் எனினும் அது கர்த்தருக்காக பயன் படும் என விசுவாசிக்கிறேன்.

இந்தியாவில் உள்ள  என் உடன் வேலையாலுக்காக 1500 ஆங்கில முகவரி அட்டை பதிவு செய்திருக்கின்றேன், அது அதிக பட்சம் 3 வாரங்களுக்குள் அவருக்கு கிடைத்துவிடும் என அறிவித்திருக்கின்றனர், நானும் அது போலவே விசுவாசிக்கிறேன்.  இது அவர் கையில் கிடைத்தவுடன் வி.ஒ.சி என்ற  இடத்தில் ஊழியங்களை தொடங்கி விடுவார். நான் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கும் இடத்தின் பெயரும் வி.ஒ.சி தான் என்பதை மகிழ்ச்சியோடு தெருவித்த்க் கொள்ளுகிறேன்.  எனினும் அவர் தொடங்கவுள்ள வி.ஒ.சி என்பது புழல், சென்னை, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ளது என்பதனை தெருவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  மேலும், என் உடன் வேலையாளிடம், என் இணையதளத்தை எவ்வாறாக மாற்றி அமைக்கலாம் என்ற அறிவுறைகள் மற்றும் உதவியை கேட்டிருக்கின்றேன்.  இந்த இணையதளத்தை தமிழில் மொழிப் பெயர்க்கலாம் என்று முடிவு செய்தோம். எனினும் அவர் வாழும் இடத்தில் தமிழ் தட்டச்சு இல்லாதக் காரணத்தால், ஆன்-லைனில் எவ்வாறு அவற்றை மொழிப்பெயர்க்கலாம் என்பதை அலசிக் கொண்டிருக்கின்றோம்.

நான் இன்று 50 கேள்விகளை வேத வினா போட்டிக்காக தயார் செய்துள்ளேன்.  அது கடினமானது தான் எனினும் அது ஜெபத்திற்க்கும், வேத ஆராய்ச்சிக்கும் பிரயோஜனமுள்ளதாக அமையும் என விசுவாசிக்கிறேன்.

இந்தியாவில் உள்ள ஊழியர், கர்த்தருடைய ஊழியத்தை பயப்பக்தியுடன் செய்ய வேண்டும் என ஜெபித்துக் கொள்ளுஙள். மேலும், நான் அவரை அதற்க்கு ஏற்றவாறு பழுக்குவிக்க வேண்டும் என ஜெபித்துக் கொள்ளுங்கள்.  இந்த ஊழியம் முதலில் ஒரு நபரால் நடத்தப்பட்டுக் கொண்டு வந்தது. ஆனால் தற்பொழுது இரு நபர்களாக்கியுள்ளார் என்பதை எண்ணி கர்த்தருக்கு துதிகளை செலுத்துங்கள்.
 
 
 
அக்டோபர் 6/2010
 
சில நாட்களுக்கு முன்பு வேத ஆராய்ச்சி நடத்துவதற்க்கு பிரயோஜனமான புத்தகத்தை பெற்றுக்கொள்வதற்க்கு பதிவு செய்திருந்தேன். நான் என் அருகாமையில் உள்ள நண்பரோடு சேர்ந்து இக்கூட்டத்தை நடத்துவது வழக்கம், இதை பற்றி நான் முன்னமே கூறியிருக்கிறேன். என்னுடைய கனிப்பில் தற்போழுது நிலைமையை பார்க்கிலும் நான் இன்னும் வேதத்தை நன்றாக பயில வேண்டும் என விரும்புகிறேன். அந்த நண்பர் ஒரு வேத ஆராய்ச்சிக்கான் கேள்வியை தொடுத்துள்ளார் எனவே நான் அதற்க்கு ஏற்றவாறு என்னை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

அந்த வேத ஆராய்ச்சியில் கர்த்தர் என்னை பயன் படுத்துமாறு ஜெபித்துக் கொள்ளுங்கள். அந்த நண்பர் இவ்வூழியத்திற்க்கு உருதுனையாகவும், இவ்வூழியத்திற்க்கு உதவுவதாகவும் எனக்கு வாக்களித்திள்ளார், எனவே அவருக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள்.
 
 
Website provided by  Vistaprint
Website
provided by Vistaprint