இந்த இணையதளம் விசேஷமாக சபையின் ஒற்றுமையை குறித்து விளக்குவதற்க்காக அமைக்கப்பட்டதாகும். வேதாகமம் சபையை குறித்து பல வழிகளில் விளக்குகிறது. வேதாகமம் சபைக்கு குறிப்பிடும் பல்வேறு பெயர்களை நாம் அறிவோம், அவற்றில் சில மணவாட்டி, இஸ்ரவேல் மற்றும் கிறுஸ்துவின் சரீரம் என்பதை நாம் அறிவோம்.
அவர் தலையாக இருக்கிறார் நாம் அனைவரும் அவரது சரீரமாக இருக்கின்றோம், அது மிகவும் அழகானது மற்றும் அருமையானதும் கூட. இந்த பூமியில் கர்த்தருடைய சித்தம் நிறைவேறும் பொழுது, கிறுஸ்துவின் சரீரம் அவருடைய இராஜாங்கத்திற்க்கு எடுத்துக் கொள்ளப்படும். சுவிசேஷத்தில் இது குறித்து அவர் பல முறை உபதேசித்துள்ளார். மத்தேயு 13ம் அதிகாரத்தில் கிறுஸ்துவின் அரசாங்கத்தை குறித்ததான பல உவமைகள் அடங்கியிருக்கின்றன், அது ஒரு இரகசியமாகும். மத்தேயு 13:10,11(ஆங்கில வேதாகமத்தின் அடிப்படையில்) வசனங்களில் இயேசு கூறுவதை நாம் பார்ப்போமானால்;